Tuesday, 18 November 2014

நம்ம கடலூர் (Our Cuddalore):

கடலூர் (ஆங்கிலம்:Cuddalore), இந்தியாவின் தமிழ்நாடுமாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நகராட்சி ஆகும்.

சொற்தோற்றம்:

முற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரலாறு:

இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் , முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்படுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.

ஆங்கிலேய ஆட்சி:

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.


ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புவியியல்:

இவ்வூரின் அமைவிடம் 11.75° N 79.75° E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை:

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,73,361 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 85,593 ஆண்கள், 87,768 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 88.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.08%, பெண்களின் கல்வியறிவு 84.15% ஆகும்.மக்கள் தொகையில் 15,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போக்குவரத்து:

கடலூர் தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.

தொடருந்துப் போக்குவரத்து:

கடலூர் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி ரயில் பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.

சாலைப் போக்குவரத்து:

கடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி , சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, Salem போன்ற முக்கிய நகரங்கள செல்ல அடிக்கடி பேருந்துகள் சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை

எஸ்.எச்.9 - கடலூர் சித்தூர் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - மேல்பட்டாம்பாக்கம்-பண்ருட்டி - திருகோவிலூர் - திருவண்ணாமலை - வேலூர் - காட்பாடி- சித்தூர்)
எஸ்.எச்.10 - கடலூர் சேலம் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்)
எஸ்.எச்.68 - கடலூர் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் -திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை.


Cuddalore is a town which is the headquarters of the Cuddalore District in the south Indian state of Tamil Nadu. Scholars believe the name Cuddalore is derived from Koodalur, meaning confluence in Tamil. While the early history of Cuddalore remains unclear, the town first rose to prominence during the reign of Pallavas and Medieval Cholas. 

After the fall of Cholas, the town was ruled by various dynasties like Pandyas, Vijayanagar Empire, Madurai Nayaks, Thanjavur Nayaks, Thajavur Marathas, Tipu Sultan, French and the British Empire. Cuddalore was the scene of Seven Years' War and the Battle of Cuddalore in 1758 between the French and British. It has been a part of independent India since 1947. During the 2004 Indian Ocean earthquake, Cuddalore was one of the affected towns, with 572 casualties.

Apart from fishing and port related industries, Cuddalore houses chemical, pharmacological and energy industries in SIPCOT, an industrial estate set up by the state government. The town is administered by a special-grade municipality covering an area of 27.69 km2 (10.69 sq mi) and had a population of 173,676 in 2011. Cuddalore is a part of the Cuddalore legislative assembly constituency which is a part of the Cuddalore Lok Sabha constituency. 

There are a total of nine schools, two arts and science colleges and two engineering colleges in the town. There is one government hospital, six municipal maternity homes and 37 other private hospitals that take care of the healthcare needs of the citizens. Roadways are the major means of transportation, while the town also has rail connectivity. The nearest airport is Chennai International Airport, located 200 km (120 mi) away from the town. The nearest major seaport is Karaikal port, located 100 km (62 mi) away from the town.

நன்றி/Thanks: விக்கிப்பீடியா/wikipedia

No comments:

Post a Comment