கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்று. கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.
எல்லைகள்:
தெற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும் தென்கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறை வந்தது. அதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
புவியியல்:
ஆறுகள்:-
கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன.
அணைகட்டுகள்:-
திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.
அலையாத்திக் காடுகள்:-
பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (Mangrove) உள்ளன.
நிர்வாகம்:
கடலூர் மாவட்ட வட்டங்கள்:-
வட்டங்கள்:-
கடலூர் மாவட்டம் 7 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடலூர்
பண்ருட்டி
விருத்தாச்சலம்
சிதம்பரம்
காட்டுமன்னார்கோயில்
திட்டக்குடி
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி மட்டும் தற்போது பிரிக்கபட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்:
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்:-
உலக தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இங்கே உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்கள்:-
கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடலூர்
அண்ணாகிராமம்
பண்ருட்டி
குறிஞ்சிப்பாடி
கம்மாபுரம்
விருத்தாச்சலம்
நல்லூர்
மங்கலூர்
மேல்புவனகிரி
பரங்கிப் பேட்டை (போர்ட்டா நோவா)
கீரப்பாளையம்
குமராட்சி
காட்டுமன்னார்கோயில்
தொழில்வளம்:
சிப்காட் இங்கே தொழில் பகுதியாக விளங்குகிறது. மேலும் பல தொழில்களும் நடைபெறுகின்றன. மேலும் நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது.
சுற்றுலாத் தலங்கள்:
பிச்சாவரம், கெடிலத்தின் கழிமுகம், கடலூர் தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில் மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது
No comments:
Post a Comment