Sunday, 4 January 2015

நம்ம கடலூர்: பிச்சாவரம் அலையாத்தி காடுகள்


தமிழகத்தில் இருக்கும் நாம் இன்னும் அதிகம் அறிந்திராத அற்புதமான இயற்கை அதிசயங்களுள் ஒன்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகருக்கு பக்கத்தில் இருக்கும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலையாத்தி காடுகளான பிச்சாவரம் அலையாத்தி காடுகள்.

அலையாத்தி காடுகள் (Mangrove Forest) என்பவை கடற்கரையோரத்தில் இருக்கும் மழைக்காடுகள் ஆகும். இவ்வகை காடுகளில் வளரும் மரங்களுக்கு வேர்கள் நிலப்பரப்புக்கு மேல் இருக்கும். ஆக்ஸிஜென் காற்றை உற்பத்தி செய்வதிலும், கடல் அரிப்பை தவிர்ப்பதிலும் இவ்வகை அலையாத்தி காடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த காடுகளின் மற்றுமொரு முக்கிய அம்சம் இதன் வடக்கு எல்லையில் வெள்ளார் ஆறும் தெற்கு எல்லையில் கொள்ளிடம் ஆறும் பாய்கின்றன. இந்த ஆறுகள் அலையாத்தி காடுகள் இருப்பதின் காரணமாக அலைகள் எழாத உப்பங்கழி (Back Water) ஓடையாக மாறி படகு போக்குவரத்திற்கும், கயாக்கிங் போன்ற படகு சவாரி செய்திட ஏதுவானதாக இருக்கிறது.
வெறுமனே படகு சவாரி செய்வதற்கு மட்டும் இல்லாமல் அருமையான மிக அரிதான இயற்கை கட்சிகளை காணும் வாய்ப்பையும் நமக்கு வழங்குகிறது. 'Ecotourism' சுற்றுலா சென்றிட மிகவும் ஏற்ற இடமான இங்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மிக அரிதான பறவைகள் பலவற்றை நாம் காணலாம். வாட்டர் ஸ்னிப்ஸ், கோர்மொரன்த்ஸ், ஹெரோன்ஸ், நாரைகள், கொக்குகள், மீன் கொத்தி பறவைகள் போண்டவற்றை இங்கே காணலாம்.

விடியல் விழா:
பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம். படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம். இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.

செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பிச்சாவரம் வர உகந்ததாக இருக்கிறது. அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இங்கு பறவைகள் மிக அதிக அளவில் புலம்பெயர்ந்து வருவதால் அந்த மாதங்களில் இங்கே நிச்சயம் சென்று வாருங்கள்.

The Pichavaram  - Mangrove Forest:
The Pichavaram Mangrove Forest near Chidambaram, by the Bay of Bengal is the world's second largest mangrove forest. Pichavaram mangrove forest is located between two prominent estuaries, the Vellar estuary in the north and Coleroon estuary in the south. The Vellar - Coleroon estuarine complex forms the Killai backwater and Pichavaram mangroves.The backwaters, interconnected by the Vellar and Coleroon river systems, offer abundant scope for water sports such as rowing, kayaking and canoeing. The Pichavaram forest not only offers waterscape and backwater cruises, but also another very rare sight - the mangrove forest trees are permanently rooted in a few feet of water.

No comments:

Post a Comment