https://www.facebook.com/photo.php?fbid=1568334810095318&set=a.1384606291801505&type=3
நம்ம கடலூர்(Our Cuddalore)
Saturday, 19 January 2019
Sunday, 13 December 2015
கடலூர் அரசு மருத்துவமனை வரலாறு:
கடலூர் அரசு மருத்துவமனையானது, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனையாகும். 1907-ல் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள், இந்த மருத்துவமனையில் வேலை செய்வதற்காக பாரிஸில்(பிரான்ஸ்) இருந்து இரண்டு பயிற்சி செவிலியர்கள் வரவழைத்திருக்கிறார். 1911-ல், அப்போதைய மாநில ஆளுநர் சர். ஆர்த்துவாலே (Sir Arthuvale) மருத்துவமனைக்கு வருகைபுரிந்து அதன் செயல்பாட்டை பாராட்டியுள்ளார்.
பின்னர் 1918-ல் கலெக்டர் லாங்கர் பரிந்துரையின் பேரில், மேலும் இரண்டு பயிற்சி செவிலியர்கள் கொண்டு தாய்மை சேவை, பொது மருத்துவ சேவை, அறுவை சிகிச்சை சேவை போன்றவை தொடங்கப்பட்டு பொது மருத்துவமனை (Govt. Hospital) என மாற்றப்பட்டுள்ளது.
வெறும் நான்கு செவிலியர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட மருத்துவமனையானது, தற்போது கடலூர் மக்களின் சுகாதார வாழ்விற்கு துணை நிற்பதாக செயல்பட்டு வருகிறது.
தமிழாக்கம்: Nadarajan V.
உதவி & நன்றி: கடலூர் மாவட்ட இணையதளம்
Regards,
நம்ம கடலூர்(Our Cuddalore)
Subscribe to:
Posts (Atom)